März 28, 2025

தமிழின உணர்வாளர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்!

இலங்கையில் எஞ்சிய தமிழர்களையும் கொன்று விடுங்கள் என இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்த புலவர் புலமைப்பித்தன் காலமானார். அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் (வயது 85) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த நிலையில் இன்று காலை புலமைபித்தன் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புலமைபித்தனை, சசிகலா நேற்று நேரில் சென்றுசந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.1968 இல் எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.