März 28, 2025

கடற்படை பேருந்து மோதியதில் இளைஞன் பலி!

வவுனியாவில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.நேற்று மாலை ஈரப்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற  இவ்விபத்தில் ஈரப்பெரியகுளம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி அனுஸ்க அபயரத்தின லக்மால் என்ற இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸ் பொறுப்பதிகாரி சுகந்தன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.