März 28, 2025

இலங்கையில் நில நடுக்கம்!

இலங்கையில்  ஹம்பாந்தோடை- லுணுகம்வெஹரவில்  இன்றுகாலை 10.38 மணியளவில் சிறியளவிலான நில  நடுக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2.4  ரிக்டர் அளவிலேயே  நில நடுக்கம் பதிவாகியுள்ளது என புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. எனினும் இதனால் சேதம் எதுவும் பதிவாகவில்ல‍ை என்று ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவித்தன.