November 22, 2024

புலிகள் இல்லா இந்து சமுத்திரம்: கச்சதீவும் போச்சு!

கச்சதீவில் சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அதனை மீட்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராம மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கச்சதீவு வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழர் நிலம், தமிழ்நாட்டு நிலப்பரப்பிற்கும், இந்திய இறையாண்மைக்கும் உள்பட்ட பகுதியாகும்.

1974 ஆம் ஆண்டு இந்திய அரசு, இலங்கை அரசுக்கு நாடாளுமன்றம் அங்கீகரிக்கப்படாத ஒப்பந்தம் மூலம் தாரைவார்த்துக் கொடுத்துள்ளது.

அதன் பிறகு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு, பாதுகாப்பற்றச் சூழலும், வாழ்வாதார இன்னல்களும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சீனாவின் ஊடுருவல், இராணுவ கட்டுமானங்கள் காரணமாக, தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும், இந்திய இறையாண்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

இதனால் தீவை மீட்பதே இந்தியாவின் பாதுகாப்புக்கு சிறந்தது என்றார்.