November 22, 2024

இலங்கை தயாராம்:நாங்கள்?

ஜெனீவாவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலும் அதேபோன்று இத்தாலியில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிலும் இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக, வெளிவிவகார அமைச்சர் பேராசியரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்தும் நீடிப்பதாக எடுத்த தீர்மானத்துக்கு பிரித்தானிய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. அந்தக் கூட்டத்தொடரில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நான் பங்கேற்கவுள்ளேன். இணையவழி ஊடாக இதில் கலந்துகொள்வேன்.

கடந்த மார்ச் மாதத்தில் இந்த அமர்வு நடந்தது. கடந்த 6 மாதங்களாக பெரும் சிரமங்கள் ஏற்பட்டன. கொவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் எமது நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்ட விருத்திகள் பற்றிய யதார்த்தமான கருத்தை நான் குறித்த பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளேன்.

அதேபோல இத்தாலியில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐரோப்பிய மாநாடொன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்கவுள்ளார். இந்த இரண்டு சர்வதேச மாநாடுகளிலும் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்து தெளிவுபடுத்தும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்வோம்.