இராணுவச் சதி!! கினி நாட்டு அதிபர் பதவிலிருந்து அகற்றப்பட்டார்!!
ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்த கின நாட்டின் அதிபரை அந்நாட்டு இராணுவத்தைச் சேர்ந்த குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டு அவர் அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை கினி நாட்டு அதிபர் அல்பா காண்டோவை ஆட்சியிலிருந்து நீக்கியதாக இராணுவக் குழுவைச் சேர்ந்த ஒருவர் அரச தொலைக்காட்சியில் தோற்றி அறிவித்துள்ளார். தற்போது அதிபர் அல்பா தடுப்புக் காவலில் உள்ளார். அவரின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது தெளிவாக்கப்படவில்லை.
அரசியலமைப்பைக் கலைப்பதாகவும், எல்லைகளை மூடுவதாகவும், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அறிவித்தனர்.
இன்று திங்கட்கிழமை நாட்டின் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என இராணுவம் அவித்துள்ளது. கூட்டத்தில் பற்கேற்க மறுக்கும் அமைச்சர்கள் கிளர்ச்சியாளர்களாகவே கருதப்படுவார்கள் இராணுவம் மேலும் கூறியுள்ளது.
பிராந்திய ஆளுநர்கள் இராணுவத்தினரால் மாற்றப்பட்டுள்ளனர். அந்நாட்டின் சிறப்புக் படைகளின் தளபதி கேணல் மாமாடி டோம்போயா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்துள்ளார்.
ஊழல் நிறைந்த தவறான நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத்தின் இச்செயலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் போன்ற அமைப்புககள் இராணுவச் சதித்திட்டத்தைக் கண்டித்துள்ளன. அத்துடன் மக்கள் ஆட்சிக்கு அந்நாடு திரும்ப வேண்டும் என அவை அழைப்பு விடுத்துள்ளன.