November 23, 2024

கலைஞர் அகிலா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.08.2021

பாரிசில் வாந்து வரும் கலைஞர் அகிலா இன்று தனது பிறந்தநளை உற்றார் உறவுகள் கலையுடலக நண்பர்களுடன் தனது இல்லத்தில்‌ கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

 

பாரிஸ் பாலம் படைப்பகத்தின் முதன்மை உறுப்பினர், மேடை, குறும்பட நடிகை, சமூக சேவகி, அகிலா அவர்களுக்கு 15.08.21இன்று
பிறந்தநாள்,நல்வாழ்த்துக்கள்.பாரிஸ் பாலம் படைப்பகத்துடனும் உங்களுடனும் இணைந்து நானும் வாழ்த்துவதில் பேரானந்தம் அடைகிறேன். இறையருள் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் அகிலா அவர்களே….
இனி அகிலா அவர்கள் பற்றிய மினிப்பார்வை….
பிரான்ஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் கலைவிழாவில் ஆசிரியர் அரியரட்ணம் (அரியம் மாஸ்டர்) அவர்களின் நாடகத்தில் என்னுடன் இணைந்து நடித்தார்.
நடித்த முதல் காட்சிலேயே அமோக வரவேற்பை பெற்றார்.
இளம் இயக்குனர் T. சுதர்சனின் குறும்படமொன்றில் நடித்தார் அந்த குறும்படம் பிரான்ஸில் நம்மவர்களால் நடாத்தப்பட்ட குறும்படம் போட்டியிலும் வெற்றி பெற்றது.
தொடர்ந்து சுபர்த்தனா படைப்பக படைப்பாளி இயக்குனர் கி.தீபனின் எழுத்து இயக்கத்தில் உருவான பெறாமை, ஆவர்த்தனம், வஞ்சனம், போன்ற குறும்படங்களிலும் என்னுடன் இணைந்து நடித்தார். அந்தக் குறும்படங்கள் மிகுந்த பாராட்டுக்களை அகிலா அவர்களுக்கு அள்ளிக் கொடுத்தது.
பாரிஸ் பாலம் படைப்பகத்தின் மேடை நாடகங்களில் மூத்த நாடகவியலாளர் ஜே.ஏ.சேகரனின் எழுத்து இயக்கத்தில் சிறிஅங்கிள், புனிதமலர்,கே.பி.லோகதாஸ் A.யோகராஜா, T.பரமேஸ்வரன், பிரசாத் ஆகியோருடனும் நடித்து தொடர்ந்து பாராட்டுகளை தன்வசமாக்கினார்.
பலரது பாராட்டையும் பெற்ற, பிரான்ஸில் தயாரான முழுநீள நம்மவர்கள் படமான அஜந்தனின் „ஏணை“ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி சிறப்புச்சேர்த்தார்.
பாலம் படைப்பகத்தின் நகைச்சுவை தொடரிலும் நடித்து பாராட்டுகளை பெற்றவர் என்பதும் சிறப்பு.
T.R.Oவுடன் இணைந்து தேச சமூக பணிகளிலும் முழுஈடுபாட்டுடன் இயங்குபவர்.
கொரோனா முடக்ககாலத்தில் skaf foundatione னின் வதிவிட மற்றவர்களுக்கு உணவு உதவிகள் வழங்கும் சேவையிலும் இணைந்து பணியாற்றினார்.
இப்படி நடிகை,சமூக சேவகி என பல பொறுப்புகளில் துணிச்சலுடன் செயல்ப்படும்
பெண்மணியான அகிலா அவர்கள் 15.08.21 இன்று புதிய அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். அவர் அனைத்து சிறப்புடன் நல்ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இறையருள் நிறைந்த வாழ்த்துகளை பாரிஸ் பாலம் படைப்பகத்துடனும் உங்களுடனும் இணைந்து நானும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். K.P.L
கலை யால் கலைசெய்வோம் கலைஞர்களை கனம் செய்வோம்
பாரிஸ் பாலம் படைப்பகம் (பிரான்ஸ் )