Mai 12, 2025

அதிகாரிகளிற்கு ஆப்பு!

ஒருபுறம் ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டங்கள் தொடர மறுபுறம் அரச சேiவியில் கல்லாகட்டும் அதிகாரிகள் அடிமடியில் கைவைத்துள்ளது அரசு.

அரச ஊழியர்களது சம்பளத்தின் வாழ்க்கைச் செலவுப் படி 7,800ரூபா மற்றும்,விசேட படி 2,500ரூபா இவைகளை இரத்து செய்யும் தீர்மானம் எதையும் அரசாங்கம் எடுக்கவில்லை.

ஆயினும் மேலதிக கொடுப்பனவுகள், எரிபொருள் கொடுப்பனவுகள் போன்றவற்றை பதவிநிலை உத்தியோகத்தர்களிற்கு துண்டிக்க அரசு புதிய அறிவிப்பை விடுத்துள்ளது.

முன்னதாக மாதத்தில் அரைபங்கு ஊதியத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க அரச ஊழியர்களை அமைச்சர்கள் கோரிவருவது தெரிந்ததே.