Mai 12, 2025

இலங்கை சிவப்பு பட்டியலில்:விசா நீடிப்பில்லை!

இலங்கையின் சிவப்பு பட்டியல் தடை காரணமாக லண்டன் விசா நீடிப்பு வழங்கப்படாத நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியகலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை(03.09.2021) காலை மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தனது மருத்துவ மேற்படிக்காக கடந்த மாசி மாத ஆரம்பத்தில் இலண்டன் செல்லவிருந்தமையால் தனது பதவிக்கான பொறுப்பை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சண்முகராஜா சிறீPபவானந்தராஜாவிடம் தற்காலிகமாக ஒப்படைத்து விட்டுச் சென்றிருந்தார்.

எனினும்,விடுமுறை காரணமாக மீண்டும் அவர் நாட்டுக்குத் திரும்பியுள்ள நிலையில் இலங்கையின் சிவப்பு பட்டியல் தடை காரணமாக லண்டன் விசா நீடிப்பு வழங்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.