November 22, 2024

தலீபான்களின் புதிய அரசின் உயர் தலைவர் முல்லா ஹைபத்துல்லா

ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தலீபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தலீபான்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தலீபான் இயக்கத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் பதவி வழங்கும் வகையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தலீபான்களின் தலைவரான முல்லா ஹைபத்துல்லா அஹுன்ஸாடா  புதிய அரசாங்கத்தின் உயர் தலைவராகவும் இருப்பார் என்று தலீபான்களின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி தகவல் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அறிவிக்கும் இஸ்லாமிய அரசு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். அரசாங்கத்தில் விசுவாசமான தளபதியான ஹைபத்துல்லா அஹுன்ஸாடா இருப்பதில் சந்தேகம் இல்லை. அவர் அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராக இருப்பார் என்று அவர் கூறினார்.

தலீபான்கள் செப்டம்பர் 3 ஆம் தேதி, ஆப்கானிஸ்தானில்  புதிய அரசாங்கத்தை அமைப்பதாக அறிவிப்பார்கள் என்று ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.