யாழில் காணி வாங்கும் திட்டமில்லை:மனோ?
நாமலிற்காக கொதித்து போன அவரது ஆதரவாளர்களிற்கு மீண்டும் ஒரு முறை பதிலளித்துள்ளார் மனோகணேசன்.
தமிழக முதல்வரிற்கு நன்றி சொன்ன போன நாமலிற்கு மனோ பதிலளிக்க விடயம் விவகாரமாகியிருக்கின்றது
நம்ம கபினட்டின் SUPER அமைச்சர் நாமல் தன் டுவீடில், முதலில். நம்ம தமிழக முதல்வரை போற்றி விட்டு, பாகம் 2ல், “அகதிகள் திரும்பி வந்தால் இலங்கையில் பாதுகாப்பு, மீள்வாழ்வு காத்திருக்கிறது” என்று சொல்ல, அதைதான் நான் திருப்பி கேட்டேன்.
யாழ்பாணத்து பிரபல ஊடகர்களிடம் கேட்டு விட்டுதான், வலி வடக்கில் வளமான செம்மண் காணி ராணுவம் வசம் உள்ளது. அவற்றை கைவிட்டு, “முதலில் உள்நாட்டில் இருப்போரை பாதுகாப்பாக மீள் குடியேற்றுங்கள் ப்ரதர்” என்று தமிழ்-சிங்களம்-ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் சொன்னேன்.
இல்லாவிட்டால், ஏதோ “இலங்கையில் வளமான வாழ்வு காத்திருக்குது, இந்த தமிழ் அகதிகள்தான் வீம்பாக வராமல் இருக்கிறார்கள்” என்ற கருத்து உலகில் பரவும். அது நியாயமில்லையே!
மற்றபடி, சில நம்மவர், என்னிடம் உங்க ஆட்சியில் தேங்காய் திருவினீர்களா என கேட்கிறார்கள். கவலையாக இருக்குது.
நல்லாட்சியில் நடந்த பல நல்ல விஷயங்கள் சிலருக்கு தெரியலை. தமுகூட்டணியுடன் உள்ளேயும், ததேகூட்டமைப்புடன் வெளியேயும் ஏற்பட்ட புரிந்துணர்வில் பல முற்போக்கான காரியங்கள், அரசியல் கைதிகள், இராணுவமிருந்த காணிகள் விடுவிப்பு, மலைதோட்ட வீடமைப்பு, காணி வழங்கள், பிரதேச சபைகள் என… முழுமை அடையாவிட்டாலும்கூட, நல்லாட்சியில் பல நடக்க “ஆரம்பித்தன”.
வட-கிழக்கில் தனியார் காணிகளில் இருந்த இராணுவம் போய், மக்கள் தம் சொந்த காணிகளில் மீள்குடியேறினார்கள்.
இந்த அமைச்சர் நாமலின் ஆட்சியில் ஒரு அங்குலம் காணிகூட விடவில்லை. மாறாக வடக்கில் பல இடங்களில் புதிதாக காணிகளை பிடிக்க முயல்கிறார்கள்.
நண்பர் சிவாஜிலிங்கம் போன்ற பலர் நேரடியாக “ஸ்பாட்டுக்கு” சென்று அவற்றை தடுத்து நிறுத்தியமையை நாம் ஊடகங்களில் தினசரி பார்க்கிறோமே. அப்புறம் என்ன?
பலாலியின் மீது பறக்கும் போதும், கடக்கும் போதும், அந்த காணிகளை நான் பார்த்துள்ளேன். வளமான செம்மண் என நினைக்கறேன். இப்போதான் யுத்தம் இல்லையே. மிகுதி காணியையும் விட வேண்டியதுதானே.
SUPER அமைச்சர் நாமலின் தமிழ் நண்பர்கள் சிலர் என்னிடம் நேற்று பேசினார்கள். நான் சொன்னேன். அவருக்கு எடுத்து கூறி, இந்த காணிகளையும், அந்த வடக்கின் கரைகளை பிடித்து ராணுவம் ஹோட்டல் கட்டி, சுற்றுலா பிசினஸ் செய்வதையும் விட்டு ஒதுங்க சொல்லுங்களேன். முப்பது வருஷங்கள் மேல் வாழ்விடம் இழந்துள்ள மக்கள் வாழ்த்துவார்கள். 2024 ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவும் கூடும்.
எனக்கு இதில் விசேட தனிப்பட்ட அக்கறை ஏதும் இல்லையப்பா. நான் அங்கு தேர்தல் கேட்கப்போவதும் இல்லை. என் காணி ஏதும் அங்கு இல்லை. தேசவழமையில் வாங்கவும் முடியாதே..! ஹஹா..
சொந்த ஊர் காணாமல் போவது என்பதை சென்னை சினிமாவில்தான் பார்க்கறோம். அது அங்கே நடக்குது. அது மாறி, எங்கிருந்தாலும் நம்ம தமிழருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவ்வளவுதான்.