காபூல் தாக்குதலை திட்டமிட்டவர் அமெரிக்காவின் ரோன் தாக்குதலில் பலி!!
கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் திட்டமிட்டவர் (இஸ்லாமிய அரசு குழுவின் ஆப்கானிய கிளையின் உறுப்பினர்) அமெரிக்காவின் ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.மத்திய கிழக்கில் இருந்து ஏவப்பட்ட ரீப்பர் ட்ரோன் நங்கர்ஹார் மாகாணத்தில் நடத்தப்பட்டது. தாக்குதலைத் திட்டமிட்டவர் மற்றொரு ஐ.எஸ் உறுப்பினருடன் காரில் இருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழ்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியே வெளியேறக் காத்திருந்த 170 பேர் கொல்லப்பட்டனர். அதில் 13 அமெரிக்கப் படையினரும் உளளடக்கப்படுகின்றனர்.
இத்தாக்குதலை நடத்தியவர்களை நாங்கள் மன்னிக்கவும் மாட்டோம். மறக்கவும் மாட்டோம். அவர்களை நாங்கள் வேட்டையாடுவோம். அவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்த நிலையில் நேற்று ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.