செப்டம்பர் 20 அன்று கனடிய தேர்தலில் பெரும்பான்மை அரசை அமைக்க வாய்ப்பில்லை என்கிறார் தேர்தல் கருத்துக் கணிப்பு நிபுணர் Erick Grenier
எதிர்வரும் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள கனடிய பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை அரசை அமைக் வாய்ப்பில்லை என்று கனடிய தேர்தல் கருத்துக் கணிப்பு நிபுணர் Erick Grenie தெரிவித்துள்ளார். கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனததின் சிரேஸ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒருவருக்கு தனது தேர்தல் தொடர்பான கருத்துக்களைத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Erick Grenier என்னும் இந்த கனடிய தேர்தல் கருத்துக் கணிப்பு நிபுணர்The Writ Polls என்னும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றார். அவர் மேலும் கூறுகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை அரசை அமைக்காது. அதே வேளையில் லிபரல் அல்லது கொன்சர்வேர்ட்டிவ் கட்சி இரண்டில் ஒன்றே சிறுபான்மை அரசை அமைக்கும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.