Mai 12, 2025

ஊரடங்கை நீடிக்க கோருகிறார் ரணில்!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிக்க முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்திடம் சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்,  வைத்தியர்களின் ஆலோசனையின் படி, தற்போதைய நாடளாவிய முடக்கம் போதுமான காலத்துக்கு விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன், முடக்கம் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவது அவசியம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.