Mai 12, 2025

நயினாதீவு:மரணசடங்கில் கொரோனா?

நயினாதீவில், மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

நயினாதீவில், கடந்த திங்கட்கிழமை (23) வயோதிப பெண்மணி ஒருவர், திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரது மரண சடங்கில் ஊரவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் ஓரிரு நாள்களில் உயிரிழந்தவரின் சகோதரி உள்ளிட்ட சிலருக்கு திடீர் உடல்நல குறை ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, அவர்கள் வைத்தியசாலைக்கு  சிகிச்சைக்கென சென்றபோது,  அங்கு அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில், மூவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.