நாலு பேருடனேயே கடைசியில் மங்களவும் போனார்!
செத்துப்போன இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை கூட்டமைப்பினர் முதல் மலையக தலைவர்கள் ஈறாக மாமனிதர் மட்டத்திற்கு புகழ்ந்து கொண்டிருக்கின்றிருக்கின்றனர்.
ஆனாலும் இன அழிப்பின் ஊழ்வினை பயனை தெற்கு அனுபவித்துக்கொண்டிருக்கின்றது.
ஆநாதரவாக மாலை,தாரை தப்பட்டை இன்றி நாலுபேருடன் இன்று மங்களவின் உடலமும் எரிந்து போயிருந்தது.
மூத்த ஊடகவியலாளர் நிக்சன் கருத்து பகிர்கையில் மகிந்தவின் ஆட்சியில் 2006 ஆம் ஆண்டு இவர் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது தமிழ் இளைஞர்கள் கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்படுவதாகவும் படை உயர் அதிகாரிகள் சிலர் கப்பம் பெறுவதாகவும் வெளிநாடுகளில் துணிவோடு கூறியிருந்தார்.
ஆனால் அது தமிழ் மக்களின் அன்பினால் அல்ல- இன்று ஜனாதிபதியாகவுள்ள அன்றைய பாதுகாப்புச் செயலாளருடன் முரண்பட்ட நிலையில், இவர் வெள்ளை வான் கடத்தல்கள் பற்றி அன்று வெளிவிவகார அமைச்சராக இருந்து கொண்டே பேசியிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மகிந்த அவரை அமைச்சர் பதவியில் இருந்து விலக்கினார். பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.
தேசிய இனம் ஒன்றின் அரசியல் விடுதலைக்கு எதிராக சர்வதேச அரங்கில் இவர் எப்படிச் செயற்பட்டார் என்பது சொல்லி தெரியவேண்டியதல்ல.-
ஈழத் தமிழர் அரசியல் வரலாறு எழுதப்படும்போது அல்லது ஏற்கனவே பலாராலும் எழுதப்பட்ட கட்டுரைகளை நோக்கினால், கிட்டத்தட்ட பண்டாரநாயக்கா, ஜே.ஆர் ஜயவர்த்தன போன்ற தலைவர்களின் செயற்பாடுகளை ஒத்தாகவே இருக்கும்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என்ற பெயரில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தைப் பதவியில் அமர்த்தியதில் இவருக்கே பெரும் பங்கு.
ஆதனால்,
1) ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஈழத்தமிழர் விவகாரம் இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் பிரச்சினையாகச் சுருக்கப்பட்டது. தமிழர்கள் அல்லது வடக்குக் கிழக்கு என்ற சொல்லே இல்லாமல் இலங்கை பற்றிய சர்வதேச அறிக்கைகள் வெளிவந்தன.
2) முப்பது வருடங்களுக்கும் மேலாக வடக்குக் கிழக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு வந்த தமிழர்களின் பாரம்பரியக் காணிகள், கொழும்பை மையமாகக் கொண்ட அரச திணைக்களங்களினால் சட்ட ரீதியாக அபகரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
உதாரணம் தொல்பொருள், வனஇலாக, காணி ஆகிய திணைக்களங்கள் மற்றும் ஆணைக்குழுக்கள்
3) இன அழிப்பு என்ற பேச்சை இல்லாமல் செய்ய காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகம் வடக்குக் கிழக்கில் திறக்கப்பட்டது.
4) தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பதைத் தவிர்த்துப் புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சியும் அவற்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உள்ளடக்கியமையும்.
தன்னுடைய இந்த அரசியல் முயற்சிகளினால், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் ஏற்படவிருந்த அபகீர்த்தியை இல்லாமல் செய்ததகவும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி கூறுவதாகவும் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதுமாத்திரமல்ல ராஜபக்ச குடும்பம் இதனை மறந்துவிடக்கூடாதெனவும் அவர் பாராளுமன்றத்தில் பகிரங்கமாகவே சொல்லியிருந்தார்
ஆக இவர் தன்னுடைய சிங்கள பௌத்த தேசியத்துக்கு
விசுவாசமாகவும், சிறந்த அரசியல் செயற்பாட்டாளராகவும் விளங்கியிருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் சந்திரிகா, மகிந்த, மைத்திரி ஆகிய மூவரும் இவருடைய அயராத முயற்சியினாலேயே ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடிந்தது.
இவா பல அரசியல் மாற்றங்களை செய்திருந்தார். அமெரிக்கப் பென்ரகனின் நெருங்கிய நண்பர். அந்த உறவின் மூலமே ஆட்சி மாற்றங்களை இவரால் செய்ய முடிந்தது.
அமெரிக்கா பகைத்துக் கொள்ளாத முறையில் சீனாவுடன் புதிய சமாந்தர அரசியல். பொருளாதார உறவை வகுத்த சிங்கள இராஜதந்திரிகளில் இவர் முக்கியமானவர்.
ஈழத் தமிழர் அரசியல் விடுதலை பற்றிய விவகாரங்கள், சர்வதேச அரங்கில் பேசுபொருளாகக்கூட இருக்கவே கூடாதென்ற, ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனைக்கு இவர் 2015 ஆம் ஆண்டு செயல் வடிவம் கொடுத்திருந்தார்.
அதன் நற்பயன்களையே இன்று கோட்டாபய ராஜபக்ச அனுபவிக்கின்றார். ஆகவே மனம் உருகி அழ வேண்டியவர்கள் ராஜபக்ச குடும்பமும். சிங்கள மக்களுமே. சிங்கள அரசியல் வரலாற்றில் இவருக்கென்று தனியொரு இடம் உண்டு என்றால் அது மிகையாகாது என தெரிவித்துள்ளார்.