März 28, 2025

உடுப்பிட்டி சந்தை வியாபாரி கொரோனாவால் மரணம்!

நினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட உடுப்பிட்டி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிவாலயம் கரணவாய் தெற்கு கரவெட்டியைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வீட்டில் நினைவற்று கிடந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் உடுப்பிட்டி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடுபவர் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உடுப்பிட்டி சந்தையை மூட திட்டமிடப்பட்டுள்ளது.