November 24, 2024

யாழில் இரவிரவாக இராணுவம் தேடுதல்!

இலங்கையில் அனைவரிற்கு ஊசி வழங்கி கொரோனா கட்டுப்பாட்டை பேண படையினரை முழு அளவில் அரசு தயாராகியுள்ளது.இதன் பிரகாரம் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து வீடு வீடாக ஊசி பெற்றிராதவர்களை அடையளாம் காணும் பணி யாழில் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சில கிராமங்களில் இரவிரவாக வீடுகளில் சோதனை நடந்ததாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே 18-30 வயதிற்குட்பட்டவர்களுக்கு செப்டம்பர் 2 வது வாரத்திற்குள் தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளதாக செயல் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சமிதா கினிகே தெரிவித்துள்ளார்.

இன்னொரு புறம் 80,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த தடுப்பூசி தொகுதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளது.