November 23, 2024

ஆப்கானிஸ்தானால் இலங்கைக்கும் ஆபத்து? விடுக்கப்பட்டது அபாய எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் – காபூலில் உள்ள இலங்கை பணியகத்தை மூடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட ரணில்,

“ஆப்கானிஸ்தானில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் இது ஜிகாத் மற்றும் அல்-கொய்தா போன்ற பயங்கரவாதக் குழுக்களின் மையமாக மாறும்.

எனவே அந்த நாட்டில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய நிர்வாகத்தை இலங்கை அங்கீகரிக்கக் கூடாது.

அந்த நாட்டுடனான தனது இராஜதந்திர பணியை இலங்கை மூட வேண்டும்.

கடந்த காலத்தில் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பயங்கரவாத மையமாக மாறியது.

இந்த நிலையில், மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் இராஜதந்திர உறவுகள் தொடர்ந்தால் இலங்கையிலும் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கும் என்று அவர் எச்சரித்தார்.