கோத்தாவிடம் வரம் கேட்கிறார் சாம்?
த
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்திப்பதற்கான ஏற்பாட்டை செய்து தருமாறு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.முன்னதாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இறுதி நேரத்தில் கைவிடப்படது. அத்துடன் மீண்டுமொரு தினத்தில் சந்திப்பதாக கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இது வரை காலமும் அது தொடர்பில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
தாங்கள் விரும்புகின்றபோது தங்களை சந்திப்போம் என்பதை தங்களுக்கு அறியத் தருகிறேன் எனவும் இரா.சம்பந்தரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சராகியுள்ள பீரிஸை எம்.ஏ.சுமந்திரன் இரகசியமாக சந்தித்திருந்த நிலையில் சம்பந்தனின் கடிதம் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.