Mai 12, 2025

கண்டி ஸ்ரீதலதா பெரஹெர: பலருக்கு கொரோனா!

வடக்கு ஆலயங்களால் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளதாக  யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி விளக்கமளித்துள்ள நிலையில் கண்டி ஸ்ரீதலதா பெரஹெர வீதித்திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில், அங்கு பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவிழாவில் விஷ்னு விகாரையைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி-சில்வெஸ்டர் கல்லூரியின் சார்பில் நடனக் கலைஞர்களாகப் பங்கேற்றவர்களில் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, பெரஹெர விழாவில் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 16 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.