ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்தில் 11 மாகாண தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் கஜினி மற்றும் ஹெராத் நகரங்களை தாலிபான்கள் கைப்பற்றியதுடன் கடந்த ஒரு வாரத்தில் 11 மாகாண தலைநகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
கஜினி நகரைக் கைப்பற்றியதால் அது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நகரைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இரண்டாவது பெரிய நகரமான கந்தஹாரிலும் கடும் சண்டைகள் நடைபெற்று வருகின்றது.
அத்துடன் கஜினி நகரம் முக்கியமாக காபூல் – கந்தஹார் நெடுஞ்சாலையில் உள்ளது. தெற்கில் உள்ள தீவிரவாதப் பகுதிகளை காபூலுடன் இணைக்க இந்த நகரம் உதவுகிறது.
20 வருட இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் மேற்று நாடுகளின் வெளிநாட்டு துருப்புக்கள் திரும்பப் பெறுவதால், தலிபான்கள் கிட்டத்தட்ட நாளொன்றுக்கு புதிய பிரதேசங்களைக் கைப்பற்றி வருகின்றனர்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பிராந்திய நகரங்களில் மூன்றில் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துகின்றனர். இது அரசாங்கப் பாதுகாப்புப் படையினருக்கு ஒரு கடுமையான அடியாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில் தலிபான்கள் சிறைகளைக் கைப்பற்றி கைதிகள் அனைவரையும் விடுவித்து வருகின்றனர்.
தலிபான்களிடம் சரணடைந்து வரும் ஆப்கானிஸ்தான் படையினருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.