படையினரிடம் தடுப்பூசி ! இடுப்புக்கு கீழ் செயலிழப்பு
நாட்டின் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்தை சிறீலங்கா அதிபர் படையினரிடம் கையளித்துள்ளதால் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் இன அழிப்பு குற்றவாளியும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் படைத் தளபதியும் COVID – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக தடுப்பூசி ஏற்றும் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. எந்த ஒரு மருத்துவ நிபுணத்துவங்களையும் கொண்டிராத படைத்தளபதி பொதுமக்களுக்கான மருத்துவப்பணியில் ஈடுபடுகின்றமை மருத்துவ நிபுணத்துவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறீலங்கா அதிபரினால் படையினரைப் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கொவிட்19 செயலணியை உடனடியாக கலைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கமரசிங்க கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேல் மாகாணத்தில் முதியவர்கள், நோய் பாதிப்புகளுக்கு ஆளானவர்கள், ஊனமுற்றவர்கள், பலவீனமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுக்கு இடுப்புக்கு கீழ் பகுதி இயக்கம் இல்லாது உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்று (12) முதல் படையினர் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.