மட்டக்களப்பில் மூடு:வல்வெட்டித்துறையில் திற!
மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் பணியாளர்கள் கொரோனா தெற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து மட்டக்களப்பு மாநகர சபை இன்று முதல் சில தினங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதனிடையே வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை நகரசபைகளில் போதிய தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காது பணிகளை தொடர முயற்சிக்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபையில் தொழில் புரியும் பணியாளர்களுக்கு இன்றய தினம் மட்டக்களப்பு நகர் பகுதியில்; பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட சில அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகர சபையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறான அடையாளம் காணப்படுகின்ற தொற்றாளர்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் கண்டுகொள்ளாத மனநிலையில் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக் வல்வெட்டித்துறை,பருத்தித்துறை நகரசபை செயலாளர்கள் கொரோனா அறிவுறுத்தல்களை தாண்டி பணியாளர்களை கடமைக்கு சமூகமளிக்க பணித்துள்ளனர்.எனினும் நகரசபை செயலாளர்கள் தாம் பாதுகாப்பாக வீடுகளில் முடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.