டக்ளஸ் தலையீடு:சிவன் கோவிலிற்கு அனுமதி!
சுகாதாரப்பிரிவினரால் சீலிடப்பட்ட பருத்தித்துறை சிவன் ஆலயத்தில் மீண்டும் பூஜை வழிபாடுகளிற்கு டக்ளஸின் பணிப்பினையடுத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளினையடுத்து பருத்தித்துறை சிவன் கோவிலில் பூஜைகள் நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் சுகாதார அதிகாரத் தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சிவன் ஆலய வருடாந்த திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த ஐந்து நாட்களாக சுவாமி வெளிவீதி ஊர்வலம் இடம்பெற்றது
இந்நிலையில், கொவிட் நிலைமை காரணமாக கோவில் திருவிழாக்கள் வெளிவீதி சுவாமி சுற்ற முடியாது என அறிவிக்கப்பட்ட நிலையில் அதனைப் பொருட்படுத்தாது சுவாமி வெளிவீதி சுற்றியதன் காரணமாக, பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினரினால் நேற்று கோவில் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
குறித்த விடயம் ஆலய நிர்வாகத்தினரால்; டக்ளஸிற்கு புகாரிட, சம்மந்தப்பட்ட சுகாதாரத தரப்பினரை தொடர்பு கொண்ட டக்ளஸ் தேவானந்தா, சுகாதார நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆலய பூஜைகளை தொடர்வது தொடர்பாக பணித்துள்ளார்.
இதனையடுத்து, ஆலயத்தின் தற்போதைய பூசகர்கருக்குப் பதிலாக, வெளியிலிருந்து பூசகர் ஒருவர் மாத்திரம் வருகை தந்து பூகைளை நடத்துவதற்கு சுகாதாரத் தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.