November 21, 2024

இந்தியாவில் அவுடிநிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள்: என்னென்ன சிறப்பம்சங்கள்!

 

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் விதமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதற்கேற்ப வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் மற்றும் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் மின்சார வாகன நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பானது, எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல், அதனை வாங்க விரும்பும் மக்களுக்கும் சர்ப்ரைஸ் அறிவிப்பாக அமைந்துள்ளது.

ஆடி

மேலும், புதிய எலக்ட்ரிக் கார் மற்றும் எலக்ட்ரிக் பைக் வாங்குவோருக்குப் பதிவு கட்டணம் என்பது இனி கிடையாது, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்வதோடு, ஏற்கனவே வாங்கிய எலக்ட்ரிக் வாகனங்களின் ஆர்சி ரினிவல் கட்டணமும் ரத்து செய்யப்படும் அறிவித்தது.

இந்த அறிவிப்பால் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. பிரபல கார் நிறுவனமான ஆடி நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்து தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜெர்மனியை தளமாகக் கொண்ட ஆடி நிறுவனம், தனக்கென்ற தனிப்பட்ட வாடிக்கையாளர்களை சம்பாதித்துள்ளது. லக்ஸரி கார் உலகில் தனிப்பெரும் மதிப்புடன் இருந்து ஆடி தற்போது எலக்டிரிக் கார்களுக்கு இருக்கும் மவுசை அடுத்து எலக்ட்ரிக் கார்கள் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளது.

முதல்படியாக, எஸ்.யூ.வி மாடலில் எலக்டிரிக் கார்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கும் ஆடி தனது இ-டிரான் 50, இ-டிரான் 55, ஆடி ஸ்போர்ட்பேக் மாடல் கார்களுக்கான இந்திய விலையையும் வெளியிட்டுள்ளது.

* ஆடி இ-டிரான் 50 கார் 99 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்

* ஆடி இ-டிரான் 55 கார்கள் 1,16,15, 000 ரூபாய்

* ஸ்போர்ட்ஸ் பேக் காருக்கு 1,17,66,000 ரூபாய்

சென்ற ஆண்டே இந்த கார்களை இந்தியாவில் அறிமுக செய்ய திட்டமிட்டது. ஆனால் கொரோனா அந்தத் திட்டத்தை முடக்கிப்போட வைத்தது. இந்த நிலையில் தற்போது எலக்ட்ரிக் கார்கள் அறிமுக நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது.

ஆடி

சிறப்பம்சங்கள்!

ஆடி இ-டிரான் 50, ஆடி இ-டிரான் ஸ்போர்ட்பேக் 55 கார்களில் 95KW பேட்டரி.

* 359 முதல் 484 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணிக்க முடியும்.

* 300 kW ஆற்றலையும், 664 nm-டர்க்கியூவையும் மேலே சொன்ன இந்த இரண்டு கார்களும் கொண்டுள்ளன.

ஆடி இ-டிரான் 50 வேரியண்டில் 71 Kw பேட்டரி

* 264 முதல் 379 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.

*ஆடி இ-டிரான் 50 போஸ்ட் 230 kw பவர் மற்றும் 540 என்.எம் டர்க்கியூ கொண்டுள்ளன.

* அனைத்து கார்களிலும் 8 ஏர் பேக் கொண்ட பாதுகாப்பு அம்சங்கள்.

* டிஜிட்டல் மேட்டிரிக்ஸ் எல்.இ.டி விளக்குகள், பானரோமிக் சன்ரூப்.

* ஆரஞ்சு நிற பிரேக் கேலிப்பர்கள், 20-இன்ச் 5 ஸ்போக் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட் போன்றவை.

* கார் சர்வீஸ் வாரண்டி 5 ஆண்டுகள்

* பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,60,000 கிலோ மீட்டர் வரை வாரண்டி.