November 23, 2024

மசூதிகள் மூடல்:அவசர சுடலை தேவை!

தென்னிலங்கையின் பேருவளை பகுதியில் உள்ள 18 மசூதிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், தனி மனித மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டும் இவ்வாறு மசூதிகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சீன கோட்டை மசூதி சங்கத்தின் இணைச் செயலாளர் எம்.எம்.எம்.ஷிஹாப் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்கள் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் ஒரு நாளைக்கு 150- 200 உடல்களை தகனம் செய்யக்கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கையின் கொரோனா நிலைமைகள் தொடர்பாக தனது ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசு துணிச்சலான முடிவை எடுத்தது. இந்த சவாலின் ஒரு பகுதியாக ஒரு நாளைக்கு 150- 200 திறன் கொண்ட வெகுஜன தகனம் செய்யும் வசதியை உருவாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுனேத் அகம்பொடி, ரஜரட பல்கலைக்கழகத்தின் மருந்துவ பீடப் புற்றுநோயியல் துறை பேராசிரியரும் தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர் என அனைவராலும் நன்கு அறியப்பட்டவராவார்.