கனடாவில் பொதுத்தேர்தல்
கனடாவில், பெரும்பரவல் காலத்திலும், பொதுத்தேர்தல் ஒன்று பாதுகாப்பாக நடத்தப்பட முடியுமென, மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். வரும் இலையுதிர் காலத்தில், தேர்தலை கனடா சந்திக்கலாம் என, எதிர்பார்ப்புக்கள் வலுத்து வருகின்றன. எனினும், டெல்டா திரிபின் காரணமாக, நான்காவது அலை வைரஸ் பரவலுக்கான அச்சமும் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே, கனடிய மக்கள் வாக்களிப்பு ஒன்றுக்கு முகம்கொடுக்க நேரிட்டால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அதனை நடத்த முடியுமென, சுகாதார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கான அழைப்பொன்று விடுக்கப்பட்டால், அதனை பாதுகாப்பாக நடத்துவதற்கு தயார்நிலையில் உள்ளதாக, கனடிய தேர்தல்கள் திணைக்களம் கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் 19 நிலைமைகளுக்கேற்ப, அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வுடன் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, தற்போதைய காலகட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது, ஒரு பொறுப்பற்ற செயலென, NDP கட்சி குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.