ஜேர்மனியில் பெருவெள்ளத்துக்கு 180 பேர் பலியான நிலையில், அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரலாமா என ஜேர்மனி ஆலோசித்துவருகிறது.ஜேர்மனியில், ஜூலையில் பெய்த மழையைத் தொடர்ந்து உருவான பெருவெள்ளத்துக்கு 180 பேர் வரை பலியானார்கள். அப்போது, மக்களை எச்சரிக்க அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுத்தார்களா என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்தது.ஆகவே, பெருவெள்ளம் குறித்து மக்களை எச்சரித்து வெளியேற்றுவதில் தோல்வி அல்லது தாமதம் ஏற்பட்டதால், கவனக்குறைவால் மரணம் மற்றும் கவனக்குறைவால் உடலுக்கு ஊறு ஆகிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாமா என ஆலோசித்து வருவதாக, ஜேர்மனியின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அப்படி நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், பெடரல் மற்றும் மாகாண அதிகாரிகள் மக்களை எச்சரிக்க போதுமான முயற்சி செய்யவில்லை என ஏற்கனவே அவர்கள் மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என கருதப்படுகிறது.