மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டம்!!
மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உட்பட 7 கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று திங்கட்கிழமை (02) கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவர் உதயரூபன் தலைமையில் இந்த ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து காந்து பூங்காவிற்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்தனர்.
இதில், அதிபர் ஆசிரியர்களின் 24 வருட சம்பள முரண்பாட்டை நீக்கு, அதிபர் ஆசிரியர்களின் சேவையை அகப்படுத்தப்பட்ட சேவையாக அங்கீகரி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை அமுல்படுத்தாதே, அதிபர் ஆசிரியர்கள் மாணவர் பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்து, இலவச கல்வியை இராணுவமயாமாக்காதே , அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கி எமது சேவையை கௌரவப்படுத்து, அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து, போன்ற 7 கோரிக்கைகளை முன்வைத்து சுலோகங்கள் ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.