März 28, 2025

இறுதி எச்சரிக்கை!! வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்!!

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொண்டவர்கள்,அவ்வீடுகளில் வசிக்காமல், பிற இடங்களில் வாழ்கின்றனர்.

இந்த நிலையில், குறித்த வீடுகள் பராமரிப்பற்று காணப்படுவதாகவும் இதன் காரணமாகவே, நிரந்தர வீடுகளில், வெள்ளிக்கிழமை (30) முதல் குடியேற வேண்டும் எனவும் அவ்வாறு இல்லையெனில், வீட்டின் பயனாளிகள் மாற்றப்படுவார்கள் எனவும் கரைச்சி பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.