März 31, 2025

நடிகை ஷகீலா உயிரிழந்துவிட்டதாக வெளியான வதந்திக்கு நடிகை ஷகீலாவே வீடியோவில் பேசி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகை ஷகீலா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். தற்போது கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஷகிலா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

 

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தொடர்ந்து சின்னத்திரையில் பிசியாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் நடிகை ஷகீலா இறந்துவிட்டதாக, யாரோ ஒருவர் கேரளாவில் வெளியிட்ட தகவல் தீயாய் பரவி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அது பொய் என்று நடிகை ஷகீலாவே வீடியோ ஒன்றை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியை வைத்துள்ளார்.