November 22, 2024

பெல்ஜியத்தில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின்  ஆணையகத்தின்  முன்றலில்  மனிதநேய ஈருருளிப்பயணமும் கனயீர்ப்பு ஒன்றுகூடலும்

பெல்சியத்தின் அன்வேர்ப்பன் மாநகரத்தில்  அமைக்கப்பட்ட மாவீரர்  நினைவுக்கல்லறையில் இருந்து அகவணக்கத்தோடு பெரும் எழுச்சியாக மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியத்தின் தலை நகராகிய புருசல் மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகத்தின்   முன்றலினை நோக்கி நகர்ந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின்  ஆணையகத்தின்  முன்றலை வந்தடைந்த மனித நேய ஈருருளிப் பயண மனிதநேய செயல்படடாளர்களை மலர் செண்டு கொடுத்து வரவேற்றலுடன் கருப்பு யூலை தமிழினப் படுகொலை நாள் நினைவு வணக்க நிகழ்வு பொதுச் சுடர் ஏற்றலுடன் மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்கத்துடன் நேற்று மதியம் (26/07/2021)
13.00 மணிக்கு ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டும், எமது தலைவர் பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் சுதந்திர விடுதலைப் போராளிகள்,தமிழ் மக்களுக்கு தமிழீழமே ஒற்றைத்  தீர்வு என்றும்  , சிறீலங்காவின்  சனாதிபதி தமிழின படுகொலையாளி என்றும் சர்வதேசமே ஈழத்தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும்,   தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை தேவை என்றும் குரல் எழுப்பி  பெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
தமிழின அழிப்பின் ஆதாரங்கள் தாங்கிய பதாகைகளோடும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே

எமக்கான ஒரே தீர்வு எனவும் கோசங்கள் எழுப்பி வாழிட மொழியில் பல்லினவாழ்மக்களுக்கு விளக்க உரையும் நடைபெற்றது.
தம்மை அர்பணித்து எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர் நாடுகளில் உள்ள ஜனநாயகத் தளத்தைப் பயன்படுத்தி முன்நகர்த்துவதென்ற எந்த வினவுதலுக்குமப்பால் தமிழினத்தின் விடுதலையொன்றே தம்முயிர்மூச்செனக்கொண்டு தம்மை அர்பணித்தோருக்காற்றும் கைமாறாகும்.

அழிக்கப்பட்டுவரும் எமது தேசிய இனத்தை காப்பதற்காக தமிழர்களுடைய தார்மீக வரலாற்று உரிமையை, தமிழ்த் தேசியத்தை, தமிழரின் இறைமையை தமிழர்களாகிய நாமே போராடி மீட்கவேண்டியிருப்பது என்பது ஒவ்வொரு தமிழனும் தனது இனத்துக்காக செய்யவேண்டிய ஒப்பற்ற கடமையாகும்!
எமது சுதந்திரத்துக்காக மண்டியிடாது தொடர்ந்து ஓயாது போராடிவரும் தமிழர்களாகிய நாம், சர்வதேச நாடுகள் ஒன்றுகூடுகின்ற இந்த காலப்பகுதியில் இனவழிப்புக்கு உட்பட்டுவரும் எமது மக்களுக்கான நீதியை வலியுறுத்தியும், எமது வரலாற்றுத் தார்மீக உரிமையை வலியுறுத்தியும் பல்வேறு எழுச்சி மிகு மக்கள் போராட்டங்களை ஓயாது தொடர்ந்து நிகழ்த்தவேண்டியிருப்பது இன்றைய வரலாற்றுத் தேவையாக இருக்கின்றது.
எமது அன்புக்குரிய தமிழ் மக்கள் கடந்த காலங்களில் நிகழ்த்திய ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்கள் வாயிலாக உலக அரங்கில் தமிழர்களுடைய தேசிய விடுதலை அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை உங்களால் அவதானிக்க முடிகிறது. எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்டு, உலக அங்கீகாரத்துக்காக ஒரு வெற்றிகரமான பரிமாணத்தில் பயணித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

இது எமது மக்களின் போராட்டம். எமது மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டம். மக்கள்சக்தி வாய்ந்த போராட்டங்களை எந்த சக்தியாலும் அடக்கிவிட முடியாது என்னும் நியதி உண்டு. நாங்கள் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக எழுச்சிபெற்று, எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் காட்டிய பாதையில் இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம்!