கனடா- தென்மராட்சி நிறுவனம் நடத்திய ஒன்றுகூடலும் ஊடகவியலாளர்கள் சந்திப்பும்..
——————————————————————–
பல நாடுகளில் இயங்கும் ‚தென்மராட்சி நிறுவன கிளைகளோடு இணைந்து பல கல்வி சார் நற்பணிகளை முன்னெடுத்து வரும் முற்போக்கான செயற்பாடுகள்……….
—————————————————–
கனடா- தென்மராட்சி நிறுவனம் நடத்திய ஒன்றுகூடலும் ஊடகவியலாளர்கள் சந்திப்பும் கடந்த சனிக்கிழமையன்று மேற்படி நிறுவனத்தின் தற்போதைய தலைவரும் என்னும் பொறியியல் நிறுவனத்தின் தலைவருமான திரு தேவதாஸ் (தொழிலதிபர் தாஸ்) அவர்களின் இல்ல வளாகத்தில் இடம்பெற்றது. மதிய உணவோடு கூடிய ஒரு சந்திப்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்விற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கனடா உதயன் பத்திரிகையின் பிரதம |ஆசிரியர் தனது பாரியாருடன் கலந்து கொண்டார். பல்வேறு ஊடக நண்பர்கள் அங்கு கலந்து ◌கொண்டார்கள்.
அன்றைய நிகழ்வை கனடா தென்மராட்சி நிறுவனத்தின் செயலாளர் திரு சீலன் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
அவர் தனது உரையில் கனடாவில் பல ஆண்டு காலமாக இயங்கிவரும் தென்மராட்சி நிறுவனத்தின் பணிகள் கனடாவிற்குள் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டு இல்லாமல் வேறு நாடுகளிலில் இயங்கிவரும் நிறுவனத்தின் கிளைகளோடு நெருங்கிய தொடர்பையும் இணக்கமான நட்பையையும் கொண்டு இணைந்த பணிகளாய் பல செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்றும். குறிப்பாக ஏனைய நாடுகளிலில இயங்கும் கிளைகளோடு சேர்ந்து கல்வி சார்ந்த பல உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும் தென்மராட்சிப் பகுதியில் உள்ள சுமார் 60 உயர் நிலை மற்றும் இடைநிலைப் பாடசாலைகளில் கல்வி கற்று வரும் மாணவ மாணவிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கொம்பியுட்டர் வகுப்பைகள் மற்றும் இதர விஞ்ஞான பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றையும் நிறுவ நிதி உதவிகள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய தற்போதைய கனடா தென்மராட்சி நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான திரு தேவதாஸ் (தாஸ்) தனது உரையில், தான் இந்த அமைப்போடு சேர்ந்து இயங்குவதிலும் அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதிலும் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில் எமது தாய் மண்ணில் பல தேவைகளோடு உள்ள எமது உறவுகளுக்கு உதவிட நாம் பின்னிற்கக் கூடாது என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய தென்மராட்சியைச் சேர்ந்தவரும் ‚கனடா தமிழன் வழிகாட்டி‘ வர்த்தகக் கையேடு வெளியீட்டாளருமான திரு செந்திலாதன் தனது உரையில்“ கனடாவில் இயங்கிவரும் ‚தென் மராட்சி நிறுவனம் கடனாவில் நிறுவப்பட்ட ஆரம்பகாலத்திலிருந்தே நான் இணைந்து செயற்பட்டு வருகின்றேன். 1993ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு, காலத்திற்கு காலம் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டாலும் ஏனைய அங்கத்தவர்கள் அனைவரும் அனைவரும் தொடர்ச்சியா தமது ஆதரவை வழங்கி வருகின்றார்கள் என்றும் அதைப் போன்றே என்னாலான ஆதரவை நான் தொடர்ச்சியாக வழங்கிவருகின்றேன்“ என்றும் தெரிவித்தார்.
மேலும் பலர் உரையாற்றினார்கள். அவர்களில் திரு திவ்வியராஜன் வைரமுத்து, திரு விநாசித்தம்பி துரைராஜா, திரு சௌந்தர் ,விளையாட்டுத்துறைப் பொறுப்பானர் திரு திருநாவுக்கரவு (திரு) ஆகியோரும் உரையாற்றினார்கள்.
அங்கு உரையாற்றிய திரு விநாசித்தம்பி துரைராஜா தனது உரையில் தென்மராட்சி என்னும் வளமிக்க பிரதேசத்தை வெளிநாடுகளில் இயங்கும் தென்மராட்சி நிறுவனத்தின் பல கிளைகளோடு இணைந்து அபிவிருத்தி செய்வதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று எனவும், அதற்கு பல நாடுகளிலிருந்து நிறையவே ஆதரவுகள் பெருகி வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் கல்வி, விளையாட்டு மற்றும் கவின் கலைகள் ஆகியவை தொடர்பாக எமது பிரதேசத்தில் நலிந்து போயுள்ள நிலையிலிருந்து அங்குள்ள விளையாட்டு வீரர்களையும் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
தொடர்ந்து, கலை மற்றும் பண்பாட்டு செயற்பாடுகள் ஆகியவை தொடர்பாக உரையாற்றிய திரு திவ்வியராஜன் „தென்மராட்சி அருகிப்போயுள்ள தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் கலை வடிவங்களை முன் னேற்றும் பணிகளையும் கனடா தென் மராட்சி நிறுவனம் ஏனைய நாடுகளில் இயங்கும் நிறுவனத்தின் கிளைகளோடு இணைந்து ஆற்றவுள்ளது என்று குறிப்பிட்டார்.
இவ்வாறாக ஏனைய பல நாடுகளில் இயங்கும் ‚தென்மராட்சி நிறுவன கிளைகளோடு இணைந்து பல கல்வி சார் நற்பணிகளை முன்னெடுத்து வரும் முற்போக்கான செயற்பாடுகள் தொடர்பாக அறிந்து ஊடக நண்பர்கள் தங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
+8
Like
Comment
Share