November 22, 2024

படகு கவிழ்ந்த விபத்தில் 57 அகதிகள் உயிரிழப்பு

படகு கவிழ்ந்த விபத்தில் 57 அகதிகள் உயிரிழப்பு

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்நாட்டுப் போரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அடைக்கலம் தேடி கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்வது அதிகரித்து உள்ளது.

அவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் வாயிலாக புலம் பெயர்கின்றனர். இந்த பயணத்தில் பல காரணங்களால் அடிக்கடி கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது.

இந்நிலையில், லிபியாவின் மேற்கு கடலோர நகரமான கும்சி நகரில் இருந்து சமீபத்தில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 75 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டது. அந்தப் படகு நடுக்கடலில் திடீரென கவிழ்ந்தது.

இதனை அடுத்து, உயிர் பிழைத்தவர்கள் அளித்த தகவலின்படி நீரில் மூழ்கியவர்களில் 2 குழந்தைகள் மற்றும் 20 பெண்கள் என 57 பேர் உயிரிழந்தனர். கடலில் தத்தளித்த 18 பேரை மீனவர்களும் மற்றும் கடலோர காவல் படையினரும் அதிக போராட்டத்திற்கு பின் மீட்டுள்ளனர்.