November 22, 2024

ஜேர்மனி கழிவு ஆலையில் வெடிப்பு – 5 பேரைக் காணவில்லை.

ஜேர்மனி லிவகூசன் பகுதியில் அமைந்துள்ள கழிவு ஆலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 16 பேர்

காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.

இந்சம்பவம் இன்று காலை 9.40 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது. தொடர்ந்து புகை மூட்டம் வானை நோக்கி எழுந்தது. இக்கரும்புகைக் கூட்டம் கோலோன் (கேளின்) வரையிலான வான்பரப்பில் கருமேகமாக தென்பட்டிருந்தது.

பேயர்(Bayer) மற்றும் லான்கெஸ் (Lanxess) உள்ளிட்ட இரசாயன நிறுவனங்களுக்கான தொழில்துறை பூங்காவான செம்பார்க்கில் (Chempark) உள்ள எரிபொருள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக செம்பார்க் ஆபரேட்டர் கரென்டா தெரிவித்தார்.

வெடிப்பு மற்றும் அதற்கடுத்த தீ விபத்துக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அபாயகரமான கழிவுகள் மற்றும் நச்சுப் பொருட்கள் வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் கழிவுகளை அகற்றும் வசதியின் வளாகத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன.

நஞ்சுப்புகை காற்றில் கலந்து இருப்பதால் லிவகூசன் பகுதியில் வசிப்பவர்கள் அவர்களின் வீடுகளின் கதவுகள் மற்றும் சாளரங்களை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நச்சு புகைக்கூட்டங்கள் வானில் மற்ற இரண்டு நகரங்களான புர்ஷெய்ட் மற்றும் வெர்மெல்ஸ்கிர்ச்சென் நோக்கி நகர்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மானியின் மிகப்பெரிய இரசாயன நிறுவனங்களில் ஒன்றான பேயர் லெவர்குசனில் உள்ளது.Eine Rauchwolke steigt über dem Chemiepark auf. Einsatzkräfte der Werkfeuerwehr sind im Einsatz.