Mai 13, 2025

கௌதாரிமுனையில் புதிய பண்ணைகள்!

 

சீனாவிற்கு கிளிநொச்சி கௌதாரிமுனையை தாரை வார்த்தமை தொடர்பில் சர்ச்சைகள் நீடிக்கின்ற நிலையில் கௌதாரிமுனை மக்களினது எதிர்ப்பை சமாளிக்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மும்முரமாகியுள்ளார்.

சீன கடலட்டை பண்ணைகளை அகற்றிவிடுமாறு உள்ளுர் மீனவர்கள் கோரிவருகின்ற நிலையில் பூநகரி, கௌதாரிமுனையில் உள்ளுர் மீனவர்களிற்கும் கடலட்டைப் பண்ணைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கௌதாரிமுனையில் அடையாளப்படுத்தப்பட்ட 16 இடங்களில் பண்ணைகளை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான பயனாளர்கள் கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தினால் தெரிவு  செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் அறிவித்துள்ளார்.