November 22, 2024

தென்னிலங்கைக்காக வடமராட்சி கடலும் திறந்தாச்சு!

மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு வடமராட்சி கடல் பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எனினும் உள்ளுர் மீனவர்கள் எவரும் கடலட்டை தொழிலில் ஈடுபடாத நிலையில் இத்தடை நீக்கம் யாருக்கென மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வடமராட்சி கடலில் சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பதில் தென்னிலங்கை மீனவர்கள் ஆயிரக்கணக்கில் ஈடுபட்டுள்ளனர்.இத்தகைய அனுமதி அவர்களிற்கு மட்டுமே பலனை தருமென மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பகலில் கடலட்டை பிடிக்கலாம்,கடற்கரையிலிருந்து 7கிலோ மீற்றரிற்கு அப்பாலேயே கடலட்டை பிடிக்க அனுமதியென நிபந்தனைகள் உள்ளன.எனினும் தென்னிலங்கை மீனவர்கள் அதனை கண்டுகொள்வதில்லை.

மீனவர்களது தற்போதயை பொருளாதார நிலைமையையும கருத்தில் கொண்டு, கடற்றொழில் திணைக்களத்தினால் வரையறுக்கப்படும் நிபந்தனைகளை பின்பற்றி கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்குவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.