Mai 15, 2025

200 மில்லியன் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டபோதும் ! பிரித்தானிய ஜெர்மனியில்ல பரவல் அதிகரிப்பு!

ஐரோப்பாவில் உள்ள 50வயதிற்கு மேற்பட்ட வயதானவர்கள் பாதிப் பேருக்கு மேல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில், அண்மையில் டெல்ட்டா வகை கொரோனா பரவலும் அதிகரித்துள்ள நிலையில், 200 மில்லியனுக்கும் மேற்பட்ட ஐரோப்பியர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெர்மனியிலும், பிரிட்டனிலும் மீண்டும் தொற்றுப் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளன.

மேலும் அதிகமானோரைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி, ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா மெர்க்கல் (Angela Merkel) கேட்டுக்கொண்டார்.