November 22, 2024

பின்கதவு நியமனமே நடந்துள்ளது?

 

வடமாகாணசபைக்கு புள்ளிகள் அடிப்படையில்  தகுதியான 12 தமிழ் அதிகாரிகள் இருக்கும் போதும் தகுதியற்ற சிங்களவர் ஒருவரை அரசியல் அடிப்படையில் பிரதம செயலாளராக நியமிக்கப்படுவதை பல தரப்புக்களும் கண்டித்துள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஓய்வு பெற்ற அதிகாரியொருவர் கிழக்கு மாகாணத்திலும் இதையே செய்து  இருக்கிறார்கள் .குறிப்பாக ஆளுநர், ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண சபையின் செயலாளர், மாகாணசபையின் பிரதி பிரதம செயலாளர், கிழக்கு மாகாண கல்வி  அமைச்சின் செயலாளர், கிழக்கு

மாகாணசபையின் காணி நிருவாக திணைக்களத்தின் தலைவர் என முழுமையான கிழக்கு மாகாண அரச நிருவாகத்தை சிங்கள மயப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்

இதன் மூலம் தேர்தலில் தெரிவு செய்யப்படும் முஸ்லீம் அல்லது தமிழ் முதலமைச்சர் கட்டுப்படுத்த முடியாத நிருவாக கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள் .

இந்த நியமனங்கள் எதுவும் நேர்மையான நியமனங்கள் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள கூடிய விடயமாகவே இருக்கிறது .அதே போல   கிழக்கின் மூன்று மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் சிங்கள அரசாங்க அதிபர்களாக நியமித்து இருக்கிறார்கள் .அண்மையில் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்லியல் செயலணியில் எந்தவொரு தமிழ் முஸ்லீம் உறுப்பினர்களும் இன்றி முழுமையான சிங்கள உறுப்பினர்களையே நியமித்து இருக்கிறார்கள் .இங்கே அரச நிருவாக கட்டமைப்பில் தகுதி அடிப்படையிலான நியமனஙக்ளுக்கு மாறாக  இனத்துவ ரீதியான நியமனங்களை மறுக்க வேண்டிய தேவை தமிழ் சமூகத்திற்கு இருக்கின்றது என்பதில் மாற்று கருத்தில்லையெனவும் தெரிவித்துள்ளார்.