November 24, 2024

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய ஆகாஷ் -என்ஜி ஏவுகணையைடி ஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்தது

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய புதியதலைமுறை ஆகாஷ்-என்ஜி ஏவுகணையை ஒடிசாகடற்கரைக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைதளத்தில் இருந்து 2021 ஜூலை 21 அன்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது.

பன்நோக்கு ரேடார், உத்தரவு, கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடர்பு அமைப்பு உள்ளிட்ட ஆயுத அமைப்புரீதியானஅனைத்து உபகரணங்களுடன் தரைதளத்தில் இருந்துபிற்பகல் 12.45 மணியளவில் சோதனை நடத்தப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு ஆயவகம், டிஆர்டிஓ-வின் இதரஆய்வகங்களோடு இணைந்து இந்த ஏவுகணையைதயாரித்துள்ளது. இந்திய விமானப்படையின் பிரதிநிதிகள்இன்றைய சோதனையை நேரில் கண்டனர்.

சோதனை தரவுகளை சேகரிப்பதற்காக பல்வேறு முறைகள்கையாளப்பட்டன. ஏவுகணையின் சிறப்பான செயல்பாடுஇவை அனைத்திலும் பதிவு செய்யப்பட்டு, உறுதிசெய்யப்பட்டது. வான் ரீதியான அச்சுறுத்தல்களைவெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறனை ஏவுகணை வெளிப்படுத்தியது.

இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டவுடன், அதன்வலிமையை அதிகரிக்கும் விதத்தில் ஆகாஷ்-என்ஜி-யின்செயல்பாடுகள் இருக்கும். பாரத் எலெக்ட்ரானிக்ஸ்லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்றஉற்பத்தி முகமைகளும் சோதனையில் பங்கேற்றன.

டிஆர்டிஓ, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத்டைனமிக்ஸ் லிமிடெட், இந்திய விமானப்படை மற்றும்தொழில்துறையை வெற்றிகரமான சோதனைக்காகபாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

குழுவின் முயற்சிகளை பாராட்டிய பாதுகாப்பு ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் மற்றும் டிஆர்டிஓதலைவர், இந்திய விமானப்படைக்கு இந்த ஏவுகணைவலுவூட்டும் என்றார்.