November 22, 2024

300 பண்ணை:யாருக்கென தெரியவில்லை!

 

 

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸின் நெறிப்படுத்தலில் 300க்கு மேற்பட்ட அட்டைப்பண்ணைகள் உருவாவதாக நெக்டா பணிப்பாளர் நிருபராஜ் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் தலைவர்  டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தில் சுமார் 300க்கும் அதிகமான அட்டைப்பண்ணைகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உதவிப் பணிப்பாளர் நிருபராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் தற்போது 250க்கும் அதிகமான கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர்,

2019ம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 50 கடலட்டைப் பண்ணைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும், டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அது இப்போது 300ஐக் கடந்து உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இவற்றுள் பெரும்பாலானவைக்கு முழு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுவிட்டதாகவும், தழுவல் அனுமதி வழங்கப்பட்டுள்ள ஏனையவற்றுக்கும் முழு அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி பெறுவதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்று தெரிவித்த அவர், இதனால், கடலட்டைப் பண்ணை முயற்சியாளர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தழுவல் அனுமதிகளை வழங்கி துரிதமாக கடலட்டைப் பண்ணைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வழிசெய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் அந்த கடலட்டை பண்ணைகள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளனதென்பது தெரியவரவில்லை.