Mai 12, 2025

வவுனியாவில் கிராம சேவகர் மீது தாக்குதல்!!

வவுனியா தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றது.

வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதியின் புகையிரத தண்டவாளத்திற்கும், பிரதான வீதிக்கும் இடையே உள்ள  அரசுக்கு சொந்தமான காணியில் சில நபர்கள் சுற்றுவேலி அமைத்து, வியாபார நிலையங்களையும் அமைத்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கடந்த 9 ஆம் திகதி அப்பகுதிக்கு சென்ற வவுனியா பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற வியாபார நிலையங்களை அகற்றியிருந்தார். அச் சம்பவத்தினை சுட்டிக்காட்டியே நபர் ஒருவர் கிராம சேவகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது தாக்குதல் மேற்கொண்ட நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.