Mai 15, 2025

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மங்களேஸ்வரன் நியமனம்

வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கலாநிதி ரி. மங்களேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.  பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வராக நீண்ட காலமாக கடமையாற்றிய கலாநிதி ரி. மங்களேஸ்வரன், வவுனியா பல்கலைக்கழக உருவாக்கத்துக்கு அயராது உழைத்தவராவார்.