Mai 15, 2025

சட்டப்போராட்டத்திற்கு தயாராகும் சிறீதரன்!

பூநகரி கௌதாரி முனையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சீன பின்னணி கடலட்டை பண்ணையை சட்ட ரீதியாக அகற்றுவதற்கு நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக  கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு இருக்கும் சீன பின்னணி கடல் அட்டை பண்ணையினை அகற்றுவது தொடர்பாக நேற்றைய தினம் கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் சிவஞானம் சிறிதரன் தலைமையில் கலந்துரையாடல் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.