Mai 15, 2025

இராணு சீருடை ஒத்த உடை மற்றும் ரவைகள் மீட்பு! ஒருவர் கைது!

இராணுவ சீருடைய ஒத்த உடையுடன் கூடிய பொருட்களை கொள்கலன் ஒன்றில் வீட்டு வளவுக்குள் மறைத்து வைத்திருந்த ஒருவரை சவளக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சொறிக்கல்முனை வீரச்சோலை பகுதியை சேர்ந்த 64 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை(10.07.2021) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இரு வேறு வகையிலான இராணுவ உடைகள்,  2 துப்பாக்கி ரவைகள், பற்தூரிகை, பற்பசை என சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொல்கலன் மீட்கப்பட்ட பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன்  சவளக்கடை காவல்துறையினர் சந்தேக நபரிடம்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.