Mai 12, 2025

விமானப்படை விமானம் அவசரமாக தரையிறக்கம் – திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரபரப்பு!

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று கேரள வான்பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போர் விமானத்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானி அவசரமாக தரையிறக்கினார். அதில் இருந்த விமானப்படை அதிகாரிகள் எந்தவித பிரச்சினையும் இன்றி தப்பினர்.

விமானப் படை விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.