அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை… குவியும் வாழ்த்துகள்!
ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு ’டிக் டிக் டிக்’ ’சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள ’பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
கார் ஓட்டுவதில் அதிக விருப்பம் கொண்ட நிவேதா, தனது சமூக வலைத்தளத்தில் கார் ஓட்டியது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை ஏற்கனவே வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் பலர் அஜித் பாணியில் நிவேதா கார் ரேஸில் இறங்கிவிட்டார் என்று பாராட்டி வருகின்றனர்.