März 28, 2025

நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பசில் ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டத்தை செயற்படுத்தும் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கமைய இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.