ஆமிக்கே ஊசி:ஒத்துக்கொண்டார் கேதீஸ்வரன்!
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரின் தங்களுக்கு நேரடியாக கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தேற்றல் திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதை அவர் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் அம்மாவட்ட சுகாதார திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் தடுப்பூசியேற்றும் பணிகள் ஜூன் மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இடம்பெற்றுவருகின்றன. இதற்கான தடுப்பூசிகள் இராணுவத்தினருக்கே நேரடியாக வழங்கப்பட்டுள்ள என குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத்தினால் வழங்கப்படுகின்ற ஊசிகள் அரசால் நேரடியாக அவர்களிற்கு வழங்கப்பட்டதேயன்றி சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்பட்டதல்லவெனவும் அவர் தெரிவித்தார்.